இந்தியா

மாநில எல்லைகளில் அத்துமீறும் பொதுமக்கள் - கர்நாடகா மாநில போலீசார் தடியடி

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பல கட்டுப்பாடுகளும் மீறப்படுவதால் தமிழக எல்லையோர கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பல கட்டுப்பாடுகளும் மீறப்படுவதால் தமிழக எல்லையோர கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அண்டை மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனைகளை நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் அத்துமீறி நுழையாமல் தடுக்க மாநில எல்லைப்பகுதிகளை முள்வேலிகளை கொண்டும்பள்ளங்களை தோண்டியும் கர்நாடக போலீசார் மூடியுள்ளது. இந்த நிலையில் ஒசூரில் இருந்து எல்லையோர கிராமம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் கர்நாடகா மாநிலத்திற்குள் சென்று வருவதால் அம்மாநில எல்லையோர கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அத்துமீறி நுழைவதை தடுத்தாலும், மக்கள் புதுப்புது வழிகளை கையாண்டு சென்று வரும் நிலையில்,அம்மாநில போலீசார் தடியடி நடத்தி விரட்டி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்