இந்தியா

கர்நாடகா மாநிலத்திற்கு தனி கொடி இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது - பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை

மாநிலத்திற்கு தனி கொடி பயன்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அமைவது போன்றது என பாஜக அமைச்சர் சி டி ரவி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கர்நாடக மாநிலத்திற்கு தனி அந்தஸ்து பொருந்திய கொடியை கொண்டு வர கடந்த சித்தராமய்யா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முன்மொழிந்து இருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக அமைச்சர் சி.டி. ரவி, மாநிலத்திற்கு தனி கொடி பயன்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்திருந்தார். பாஜக அமைச்சரின் இந்த பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாநிலத்திற்கு தனி கொடி இருக்கக் கூடாது என அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மாநிலத்திற்கு தனி கொடிகள் உள்ளதைபோல இந்தியாவில் ஏன் இருக்கக் கூடாது எனவும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி