கர்நாடகாவில், சாலைத்தடுப்பில் கார் மோதி தீப்பற்றிய விபத்தில் காவல் ஆய்வாளர் உடல் கருகி உயிரிழந்தார். லோக் ஆயுக்தா பிரிவில் ஆய்வாளராக பணியாற்றிய சாலிமத் Salimath என்பவர் சென்ற கார், தார்வாட் மாவட்டம் அண்ணிகேரி அருகே சாலை டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் எஞ்சின் பகுதியில் தீப்பற்றி காருக்குள் பரவியது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மயங்கிய நிலைக்குச் சென்ற ஆய்வாளர், காருக்கில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.