இந்தியா

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்... மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாய உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்... மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாய உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.மேகதாது பகுதியில், கர்நாடக அரசு அணை கட்டும் பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணை நடத்தினர். இதன் முடிவில் இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய சிறப்பு குழு ஒன்றை அமைப்பதாக பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்த நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேகதாது பகுதியில் அணை கட்டும் பணிகள் எதுவும் தொடங்கவில்லை என்றும்,அப்பகுதியில் உள்ள மண் சாலை ஒன்றை சீரமைக்க கொண்டுசெல்லப்பட்ட கட்டுமான பொருட்களை பார்த்த தமிழக விவசாயிகள், தவறாக புரிந்து கொண்டு குற்றச்சாட்டை எழுப்பியதால், பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்