இந்தியா

"பா.ஜ.க. வின் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது" - தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மாநிலத் தலைவர்

"பா.ஜ.க. வின் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது" - தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மாநிலத் தலைவர்

தந்தி டிவி

கர்நாடக அரசியலில், திடீர் திருப்பமாக குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது. காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏக்களில் ஒருவரான பீமா நாயக், பெங்களூரு வந்து, மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலை சந்தித்தார். 18 ம் தேதி கூடும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க அனைவரும் உறுதி அளித்துள்ளதாக வேணுகோபால் தெரிவித்தார். இதற்கிடையே, பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், அனைவரும் ஒற்றுமையாக உள்ளதாகவும், இந்த ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி