வழக்கத்தைவிட பறவைகள் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக கர்நாடக மாநிலம் மண்டகட்டா சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதத்தில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தரும் என்றும், அவை, முட்டையிட்டு டிசம்பர் மாதத்தில் தனது குஞ்சுகளுடன் சென்றுவிடும். ஆனால் தற்போது துங்கா அணை கட்டுமானம் மற்றும் போதிய மரங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் பறவைகள் வரத்து குறைந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.