இந்தியா

நடிகை கங்கனாவின் சொத்து மதிப்பு.. கிலோக்களில் தங்கம், வெள்ளி..

தந்தி டிவி

90 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாக, பாலிவுட் நடிகரும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் தமது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவை தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.இந்த நிலையில் அவர், செவ்வாயன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், கங்கனா, சண்டிகரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளதாக கூறியுள்ளார். 28 கோடி அசையும் சொத்துகள் மற்றும் 62 கோடி அசையா சொத்துக்கள் உட்பட 90 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கையில் 2 லட்சம் ரொக்கமும், வங்கி இருப்பில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 35 லட்ச ரூபாயும் இருப்பதாக கூறியுள்ளார். பிஎம்டபிள்யூ, பென்ஸ், மெர்சிடிஸ் மேபேக் உள்ளிட்ட மூன்று சொகுசு கார்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆறரை கிலோ தங்கமும், 60 கிலோவெள்ளியும், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 காரட் வைர நகைகளும் வைத்துள்ளதாக கூறியுள்ளார். கங்கன பெயரில், 50 எல்ஐசி பாலிசிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி