கமல்ஹாசன் விமர்சனம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் மறைமுகமாக விமர்சித்த நிலையில், அதற்கு நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அதில், தாம் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாக கமல்ஹாசன் கூறிய கருத்து தவறானது என்றும், அவரது பேச்சை சரிபார்க்காமல் தவறான கருத்து வெளியாகி இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், பெரியாரின் கூற்றையே தாம் மேற்கோள் காட்டியதாக கூறிய அவர், அது தன்னுடைய சொந்தக் கருத்து அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.