40 ராக்கெட்டுகள் தயாரிக்க பத்தாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது இஸ்ரோ வரலாற்றில் இதுவே முதல் முறை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமங்களில் அதிவேக இணையதள சேவை மற்றும் விவசாயத்தை மேம்படுத்த இது உதவும் என்றும் கூறினார்.