17 வயது மகன் கையில் காரை கொடுத்த நீதிபதி - ஒருவர் கோர மரணம்.. கைதாகிறாரா நீதிபதி?
#keralajudgesonaccident #keralajusticesoncaraccident
கேரளாவில், நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில், நீதிபதியைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொச்சி அருகே சேரானல்லூரில் கடந்த 25-ஆம் தேதி அதிகாலை நடந்த விபத்தில், ஸ்கூட்டரில் சென்ற 55 வயதான ஜெயபாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த வழக்கில் நீதிபதியின் மகனை கைது செய்த போலீசார், காரின் உரிமையாளரான அவரது தந்தை நீதிபதியையும் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தனர். இதையடுத்து நீதிபதி முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறையினர் ஏற்கனவே நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ள நிலையில், கைது செய்து காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினார். மேலும், மறு உத்தரவு வரும் வரை நீதிபதியைக் கைது செய்யக்கூடாது என இடைக்காலத்