டெல்லியில் உள்ள குடியரத்தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது,போலீசார் தடியடி நடத்தினர். கல்விக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள், பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். காவல்துறையின், தடையை மீறி செல்ல முயன்ற மாணவர்களை, போலீசார் தடியடி நடத்தி விரட்டி, அடித்தனர்.