இந்தியா

"அயோத்தி கோயிலுக்காக புதுவை ஜிப்மரை மூட வந்த உத்தரவு" - இன்று விசாரிக்கும் ஐகோர்ட்

தந்தி டிவி

ராமர் கோவில் குடமுழுக்கை ஒட்டி, வரும் திங்கட்கிழமை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை பிற்பகல் 2:30 மணி வரை மூட எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.மத்திய அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்து மருத்துவமனையை மூடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று, புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், மருத்துவமனை மூடப்படுவதால், மருத்துவ பரிசோதனைகளுக்கு தேதி பெற்றவர்கள் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக தேதி நிர்ணயிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனையை மூட வேண்டாம் எனக் கூறி மத்திய அரசுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பொது நல மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று காலை விசாரிக்க உள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்