இந்தியா

ஜார்கண்ட் முதல்வர் கைதாக வாய்ப்பு..?உடனடியாக அமலான 144 தடை

தந்தி டிவி

நில மோசடி குறித்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு பல முறை சம்மன் அனுப்பிய நிலையில், கடந்த வாரம் அவரது வீட்டிலேயே விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் 36 லட்சம் ரூபாய் ரொக்கம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம் காரணமாக, ராஞ்சியில் உள்ள முதல்வரின் இல்லத்தை சுற்றிலும் 144 தடை அமல்படுத்தப்பட்டது. அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுமார் 2000 பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹேமந்த் சோரன் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி