இந்தியா

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்.. அதிகரித்த பலி எண்ணிக்கை

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஓட்டுநர் நிலைதடுமாறிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த குழந்தை உள்பட 10 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் புனித யாத்திரை சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்