இதுதொடர்பாக வழக்கறிஞர் எம்.எல். சர்மா, நாளிதழ் நிர்வாக ஆசிரியர் அனுராதா பஸின் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நீதிபதிகள், எஸ்.ஏ. பாப்டே, அப்துல் நசீர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கறிஞர் எம்.எல். சர்மாவின் மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி, அரைமணி நேரமாக படித்து பார்த்தும் மனுவின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், முக்கியமான விவகாரத்தில் இதுபோன்ற முழுமையற்ற மனு தாக்கல் செய்வதா? என கேள்வி எழுப்பினார்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் பதிவாளரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.இதனிடையே, காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த சில நாட்களில் விலக்கி கொள்ளப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்புடன் கவனித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.