கடந்த டிசம்பர் 15ஆம் தேதி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் புகுந்து, மாணவர்களை தாக்கியதாக சிசிடிவி பதிவு ஒன்று வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான முழுமையான வீடியோவை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் போராட்டத்தின்போது ஏராளமான மாணவர்கள் நூலகத்திற்குள் நுழைவது போன்றும், அவர்கள் மேஜைகளை கொண்டு நூலக வாயிலை அடைப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.