இந்தியா

"2 நாட்களில்.. 189 கோடி.." - ஜே.பி.நட்டா சொன்ன விஷயம்

தந்தி டிவி

இமாச்சல பிரதேச மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படுவது எங்கள் பொறுப்பு என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இவர், இமாச்சல பிரதேச வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் சுக்வீந்தர் சிங்குடன் பிரதமர் தொடர்ந்து பேசி வருகிறார் என்று கூறினார். மத்திய அரசு இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு அனைத்து உதவியையும் செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். சுக்வீந்தர் சிங், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து கோரிக்கை விடுத்ததை அடுத்து, 2 நாட்களில் 189 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இமாச்சல பிரதேச மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதே தங்கள் பொறுப்பு என்றும், மத்திய அரசும், பிரதமர் மோடியும் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்றும் ஜே.பி.நட்டா கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்