Farmers | அமோகமா இருக்கு.. குஷியில் விவசாயிகள்
#flowers #farmers #thanthitv
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தசரா மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்யப்பட்ட சாமந்திப்பூக்கள் அமோக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓசூர், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சாமந்திப்பூக்கள் தற்போது பூத்துக் குலுங்கி அறுவடைக்குத் தயாராகியுள்ளன. பூக்களின் தரமும் விளைச்சலும் சிறப்பாக இருப்பதால், பண்டிகைக் காலத்தில் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வார்கள் என்றும், இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.