இந்தியாவில் சிறிய ஐடி நிறுவனங்களுக்கு 4 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும் என தொழில்துறை அமைப்பான நாஸ்காம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைகளில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு நான்கு மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது என கூறியுள்ளது. இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட நடுத்தர நிறுவனங்கள் பயன் அடையும் என்றும் தெரிவித்துள்ளது.