அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக, விபத்துக்கான முதற்கட்ட விசாரணை அறிக்கை என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் போலியானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விமானியின் இருக்கையில் ஏற்பட்ட கோளாறால், லிவர் தவறாக இயக்கப்பட்டதால் தான் விபத்து ஏற்பட்டது என்பதை போல, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. இந்த சூழலில், இதுவரை இதுகுறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.