இந்தியா

"பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா?" - கருத்துகணிப்பை ஏற்க சசி தரூர் மறுப்பு

உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா என்ற கருத்துக்கணிப்பை ஏற்க இயலாது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தோ-அமெரிக்க கருத்தரங்கில் பேசிய அவர், ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நம்ப முடியாது என்றார்.

அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிராக ஆங்காங்கே ஒன்றிரண்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், இது இந்திய ஆண்களுக்கு அவமானகரமான ஒன்று என்றார்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க இயலாது என்றும் சசி தரூர் குறிபிட்டார்.

காவல்துறையில் அதிக பெண்கள் என்ற பல புதிய மாற்றங்களால் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக மாறி வருவதையும் சசிதரூர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்