ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த மற்றொரு இந்திய கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த மற்றொரு இந்திய கப்பல் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு எண்ணெய் கப்பல் இந்தியா வந்தடைந்தது. இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவின் சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக நாட்டை வந்தடைந்துள்ளன. முதல் கப்பலான "ஷிவாலிக்" குஜராத்தில் உள்ள முத்ரா துறைமுகத்தை பத்திரமாக வந்தடைந்த நிலையில், இரண்டாவது கப்பலான "நந்தா தேவி" குஜராத் ஜாம்நகரில் உள்ள வடிநார் துறைமுகத்தை பத்திரமாக வந்தடைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.