அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க, டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரம், கடந்த ஆகஸ்டு மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில், விசாரணை முடிந்து, இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தீர்ப்பு அளித்த நீதிபதி, பொருளாதார குற்றம், தீவிரமாக கருதப்படும் என சுட்டிக்காட்டி, ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, உத்தரவிட்டார். இதனால், ப. சிதம்பரத்தின் திஹார் சிறை வாசம் தொடரும் சூழல் உருவாகி உள்ளது.