இந்தியா

"விமான பயணத்தில் இணையதள சேவை" - போக்குவரத்து அமைச்சகம் அனுமதி

பறக்கும் விமானத்துக்குள் இணையதளத்தை பயன்படுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது.

தந்தி டிவி
பறக்கும் விமானத்துக்குள் இணையதளத்தை பயன்படுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விமானத்தில், பயணிக்கும் போது, செல்போன் உள்ளிட்ட மின்னணு கருவிகளை பயன்படுத்த இந்தியா அனுமதி அளிக்கவில்லை. பாதுகாப்பு காரணமாகவும், செல்போன் சிக்னல்களால் பாதிப்பு ஏற்படலாம் என்பதாலும் அனுமதிக்காமல் இருந்தது. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஆணைய பரிந்துரையின் பேரில் மத்திய அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதையடுத்து விமானத்துக்குள் வை-ஃபை மூலம், ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை பயன்படுத்தும் வசதி ஏற்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை