இந்திய சர்வதேச திரைப்பட விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குத்துவிளக் ஏற்றி தொடங்கி வைத்தார். கன்னட திரைப்பட நடிகர் கிச்சா சுதீப் விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் இத்தாலிய ஒளிப்பதிவாளர் விட்டோரியோ ஸ்டோராரோவுக்கு மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது,. உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 224 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ள நிலையில், அதில் மூன்று இந்திய படங்களும் இடம் பிடித்துள்ளன. தொடக்கவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன