Instagram | Meta | இன்ஸ்டாவில் பாலியல் ரீதியான கண்டெண்ட்கள்..மத்திய அரசுக்கு மெட்டா கொடுத்த விளக்கம் இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்கள் குறித்து மத்திய அரசு அனுப்பிய நோட்டீசுக்கு, மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சட்டவிரோத உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், பயனர்களின் பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து போராடி வருவதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டாவின் விளக்கத்தை மத்திய அரச ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.