அமெரிக்காவின் 250வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் சர்வதேச கடற்படை அணிவகுப்பில், இந்தியக் கடற்படையின் பயிற்சி கப்பலான 'ஐஎன்எஸ் சுதர்ஷினி' பங்கேற்றுள்ளது. நியூயார்க் துறைமுகத்தில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுத்துச் சென்ற ஐஎன்எஸ் சுதர்ஷினி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நார்ஃபோல்க் மற்றும் பால்டிமோர் நகரங்களில் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து, அமெரிக்க மண்ணில் இந்திய கப்பல் நங்கூரமிட்டது.