செப்டம்பரில் முடிந்த 3-வது காலாண்டில் இண்டிகோ விமான நிறுவனத்தின் நஷ்டம் ஆயிரத்து 194 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் நஷ்டம் ஆயிரத்து 62 கோடி ரூபாயாக இருந்தது. கொரோனா ஊரடங்கில் போக்குவரத்து தடை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு, வருமானம் 64.5 % குறைந்து ரூ.3,029 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசு விமானங்களின் சேவையை அதிகரித்தால், டிசம்பரில் கொரோனா தாக்குதலுக்கு முந்தை சேவைகளின் அளவில் 80 % எட்ட முடியும் என நிறுவனம் தெரிவிக்கிறது.