இந்தியா

"இந்திய பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை" - ரிசர்வ் வங்கி தகவல்

2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சடிக்க போவதில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்திய பொருளாதாரத்தில் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு இரண்டாவது அலையின்போது பாதிப்பு ஏற்படவில்லை என்றும்

இருப்பினும் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடிக்கிறது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2021 மார்ச் மாதத்தில் 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் 85 புள்ளி 7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 83 புள்ளி 4 சதவீதமாக இருந்தது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது,. முந்தைய நிதி ஆண்டைப் போலவே, 2020-21 நிதியாண்டிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என்று எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது,. 2021 மார்ச் மாத நிலவரப்படி, நாட்டில் ஒட்டுமொத்தமாக பணப்புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 17 புள்ளி3 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இது 2020ல் 22 புள்ளி 6 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | TVK Vijay | பரபரக்கும் கூட்டணி விவகாரம் | ஒருநாள் முன்பே டெல்லி கிளம்பிய விஜய்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’