இந்தியா

இந்திய எம்.எல்.ஏக்களின் ஆண்டு வருமானம் எவ்வளவு?...

இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி ஆண்டு வருமானம் 24 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் என கள ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது

தந்தி டிவி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், ADR எனும், ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

அரசியலமைப்பு, தேர்தல், மற்றும் சட்டம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை நடத்தி வரும் இந்த நிறுவனம், தற்போது, பதவியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வருமானம், தொழில் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்திய மாநிலங்களில், உள்ள 3 ஆயிரத்து 145 சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி ஆண்டு வருமானம் 24 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவர்களில் 711 பேர் தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களது, சராசரி ஆண்டு வருமானம், 51 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என கூறப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 145 சட்டமன்ற உறுப்பினர்களில், 771 எம்.எல்.ஏக்கள், தங்களை தொழிலதிபர்கள் என்றும், 758 எம்.எல்.ஏக்கள் தங்களை விவசாயிகள் என குறிப்பிட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ள 397 எம்.எல்.ஏக்களின் உயரிய சராசரி ஆண்டு வரும் 57 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் ஏ.டி.ஆர் அமைப்பு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கல்வியில் ஐந்தாம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை பயின்ற ஆயிரத்து 52 எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் 31 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் என சுட்டிக்காட்டப் பட்டுள்ளது..

தங்களை படிக்காதவர் என கூறியுள்ள எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் 9 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 25 முதல் 50 வயதிற்குட்பட்ட ஆயிரத்து 402 எம்.எல்.ஏக்களில் சராசரி ஆண்டு வருமானம் 18 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

51 முதல் 80 வயதிற்குட்பட்ட ஆயிரத்து 727 சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி ஆண்டு வருமானம் 29 லட்சத்து32 ஆயிரம் ரூபாய் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்மொத்தமாக, ஆண் எம்.எல்.ஏ.வின் சுய ஆண்டு வருமானம் 25 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் என்றும், பெண் எம்.எல்.ஏவின் சுய வருமானம் 10 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் எனவும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி