இந்தியா

அசகாய சூரனை இறக்கிய இந்தியா - பாகிஸ்தானை குலைநடுங்க விடும் `அப்பாச்சி’

தந்தி டிவி

இந்திய ராணுவத்தில் இணையும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் - என்ன சிறப்பு?

• உலகின் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஹெலிகாப்டராக பார்க்கப்படும் அப்பாச்சி AH-64E ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரிக்க உள்ளன. • இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், 30 மில்லி மீட்டர் M230 செயின் கன் (30 mm M230 chain gun), 70 மில்லி மீட்டர் ஹைட்ரா ராக்கெட்டுகள், • 6 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பீரங்கிகள், கவச வாகனங்களை தாக்கி அழிக்கும் AGM-114 ஹெல்ஃபயர் (AGM-114 Hellfire) ஏவுகணைகளை ஏந்தி செல்லும். • மழை, தூசு, மூடுபனி, இரவு பகல் என அனைத்து சூழல்களிலும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் செயல்படும். • 2 இருக்கைகள் மட்டுமே கொண்டிருந்தாலும், இரண்டு பைலட்டுகளுமே, ஹெலிகாப்டரையும் ஆயுதங்களையும் கையாள முடியும். • ரோட்டருக்கு மேல் AN/APG-78 லாங்போ ரேடார் அமைப்பு இருப்பதால், மலைகள், மரங்கள், கட்ட‌டங்களுக்கு பின்னால் மறைந்திருந்து ஒரே நேரத்தில் 128 தரை இலக்குகளை கண்காணிக்க முடியும். • 2020ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 691 கோடி ரூபாய்க்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர் வாங்க, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. • தற்போது, 3 அப்பாச்சி விமானங்கள், சரக்கு விமானம் மூலம் உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமான படைதளத்திற்கு வந்துள்ள நிலையில், மீதமுள்ள 3 விரைவில் வர உள்ளன. • இவை, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராணுவ முகாமில் இணைக்கப்பட உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில், ராஜஸ்தானின் பாலைவனத்திற்கு ஏற்ப அதன் நிறம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் ஏற்கனவே 22 அப்பாச்சி ரக போர் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி