இந்தியா

India | Pakistan | War Ship | இந்திய கப்பல் மீது பாக்., கப்பல் மோதல்.. இந்தியா அதிரடி Reaction

இந்திய கப்பல் மீது பாக்., கப்பல் மோதல்.. இந்தியா அதிரடி Reaction

thanthitv

India | Pakistan | War Ship | இந்திய கப்பல் மீது பாக்., கப்பல் மோதல்.. இந்தியா அதிரடி Reaction வட அரபிக்கடல் பகுதியில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் அதிவேகமாக வந்து மோதி விபத்தை ஏற்படுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ​செப்டம்பர் 15 செவ்வாய்க்கிழமை மாலை சர்வதேச கடல் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக இந்திய கப்பலுக்கு பெரும் சேதமோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இரு நாட்டு கப்பல்களும் குறைந்தபட்சம் 3 கடல் மைல் இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்ற 1991 ஏப்ரல் ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் கப்பல் ஆபத்தான முறையில் செயல்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளது. ​இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகம், தனது பலத்த கண்டனத்தை பதிவு செய்ததோடு, இனிவரும் காலங்களில் இத்தகைய விதிமீறல்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.

TVK| Byelection| மரகதம் குமரவேல் வேட்புமனுவில் குளறுபடியா? - கடைசி நாளான இன்று நடந்த ட்விஸ்ட்

Semicon Summit | PM Modi | Viksit Bharat | முக்கிய மாநாட்டை தொடங்கி வைத்த PM மோடி

Maduranthakam | Dharapuram | தொடங்கியது பரிசீலனை.. பரபரக்கும் மதுராந்தகம், தாராபுரம்..!

Sudarsana Natchiappan | Ex. மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

Sivagangai Murder | தமிழகத்தை மிரட்டிய சிவகங்கை இரட்டை கொ*ல - கோர சம்பவத்தில் அதிரடி ஆக்‌ஷன்