இந்தியா

10,500 டன் அரக்கனை இறக்கிய இந்தியா - 1,000 மீட்டர் ஆழத்திற்கும் செல்லும் 'நிஸ்தர்'

தந்தி டிவி

கடற்படையில் இணைந்த ஐஎன்எஸ் 'நிஸ்தர்' மீட்பு கப்பல்

அதிநவீன மீட்பு கப்பலான ஐஎன்எஸ் 'நிஸ்தர்' நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தனர். 2 ஆயிரத்து 396 கோடியில், 80 சதவீத உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், கடற்படை பயன்பாட்டுக்காக ஆழ்கடல் மீட்பு கப்பலை இந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம் உருவாக்கியது. சுமார், 10 ஆயிரத்து 500 டன் எடையுள்ள ஐஎன்எஸ் 'நிஸ்தர்' கப்பலில் உள்ள உபகரணங்கள் மூலம், வீரர்கள் 300 மீட்டர் ஆழம் வரை நீந்திச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட முடியும். இதில் உள்ள ஆர்ஒவி நீர்மூழ்கிகள் மூலம் கடலில் 1,000 மீட்டர் ஆழத்திலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்