இந்தியா

India | Japan | இந்தியா - ஜப்பான் உச்சி மாநாடு - புது டெல்லியில் பேச்சுவார்த்தை

India | Japan | இந்தியா - ஜப்பான் உச்சி மாநாடு - புது டெல்லியில் பேச்சுவார்த்தை

thanthitv

India | Japan | இந்தியா - ஜப்பான் உச்சி மாநாடு - புது டெல்லியில் பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், இருநாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்திலான இருதரப்புப் பேச்சுவார்த்தை புது டெல்லியில் நடைபெற்றது. இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் தகவல்கள் பகிர்வு மற்றும் தேடல்-மீட்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும். மேலும், போர்க்கப்பல்கள் கட்டும் துறை, கண்ணிவெடி எதிர்ப்பு நடவடிக்கைகள், கூட்டுப் பயிற்சிகள் மற்றும் இருதரப்பு ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நடப்பாண்டில் டோக்கியோவில் நடைபெறவுள்ள 4-வது இந்தியா-ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் '2+2' (டூ பிளஸ் டூ) கூட்டத்திற்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்