இந்தியா

இன்னும் 2 ஆண்டுகளில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் - நிதி ஆயோக் அறிக்கை

இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் சென்னை உட்பட பல நகரங்களில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

தந்தி டிவி

தில்லியில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். அதில், வரும் 2030-ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் தேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய நிலையிலேயே நாடு இருந்தால் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும் என்றும் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6 சதவீதம் இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் 40 சதவீதம் பேர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள் எனவும்,2020-ஆம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருவதாகவும், 60 கோடி பேர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 70 சதவீத நீர்நிலைகள் அசுத்தமானதாக மாறி வருகிறது என்றும், தண்ணீரின் தரம் சிறந்து விளங்கும் 122 நாடுகளில் இந்தியா 120 இடத்தில் உள்ளதாகவும், நாட்டில் 52 சதவீத நிலப்பரப்பு வேளாண் பகுதிகளாக இருப்பதால் மழையை நம்பியே மக்கள் இருப்பதால் நீர்ப்பாசன திட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி