இந்தியா

"இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதி தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்" - மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதி தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில், 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதி தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்றும், 207 மாவட்டங்கள் குறைவான பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக உள்ள இடங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்படும் என கூறியுள்ளார்.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 1118 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 392-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு