இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை10 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்து உயர்ந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்து 53 ஆயிரத்து 751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 லட்சத்து 58 ஆயிரத்து 692 பேருக்கு சிகிச்சையில் உள்ளனர். 26ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இதுவரை இல்லாத வகையில் 34 ஆயிரத்து 884 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 671 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 994 பேர் நலமடைந்து வீடு திரும்பினர்.