நாடு முழுவதும் புதிதாக 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 812 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 272 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர் என்றும் 28 லட்சத்து 13 ஆயிரத்து 658 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 14 கோடியே 19 லட்சத்து 11 ஆயிரத்து 223 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.