இந்தியா

"எல்லையில் தன்னிச்சையாக எதையும் மாற்ற முயல வேண்டாம்" - சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

இந்தியா, சீனா இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் வெளியுறவு அமைச்சகம் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

இந்தியா, சீனா இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் வெளியுறவு அமைச்சகம் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லையில், எந்தவித மாற்றத்தையும் தன்னிச்சையாக மேற்கொள்ள முயல வேண்டாம் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது. இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், எல்லையில் குவிக்கப்பட்டு உள்ள வீரர்கள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வது சிக்கலான நடைமுறை என்பது தெரியும் என்றும், பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படும் வகையில், இருநாடுகளும், வீரர்களை பதற்றமான பகுதியில் இருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்