இந்தியா

India Alliance| தேசிய அளவில் அதிர்வை கிளப்பிய இந்தியா கூட்டணி

தேசிய அளவில் அதிர்வை கிளப்பிய இந்தியா கூட்டணி

thanthitv

#indiaalliance #electioncommission மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்விகளை கேட்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளனர். நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறைகள் குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் 48 எழுத்துப்பூர்வ கேள்விகளைக் கேட்க அனுமதி கோரி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி, துணைத் தேர்தல் ஆணையர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் ஆகியோர் பிரமாணப் பத்திரம் மூலம் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் கூட்டு முடிவாக எடுக்கப்பட்டதா, அல்லது மற்ற ஆணையர்களின் ஒப்புதலின்றி தலைமைத் தேர்தல் ஆணையர் தனது அதிகாரத்தைத் தனித்துப் பயன்படுத்தினாரா என மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் நீக்கப்பட்ட புகார்கள், இணையவழி படிவம் 6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையற்றதாகக் கூறப்படும் 'ECINET' மற்றும் 'ERONET' தரவுத்தளங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எஸ்ஐஆர் முடிவின் கோப்பு எண்கள், தேதிகள் மற்றும் ஆணையர்களுக்கு இடையே ஏதேனும் மாறுபட்ட கருத்துகள் பதிவாகியுள்ளதா என்பதையும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tanisq Robbery Update|முகத்தில் கருப்பு துணி..ரெட் டீ-சர்ட்.. நிஷாந்தை பார்த்ததும் வந்த திகில் ஃபீல்

GoldPrice | GoldToday | TodayGoldPrice | இன்ப அதிர்ச்சி.. 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது தங்கம் விலை

Gold Rate | வாயை பிளக்க வைத்த தங்கம் விலை சரிவு.. இது தொடருமா?

Miniter Anand | Delhi | நாளை டெல்லி செல்கிறார் Min.ஆனந்த்.. இதுதான் காரணமா?

Periyar Arivulagam | பெரியார் அறிவுலகம் முறைகேடு.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்