இந்தியா

இந்தியாவில்... இதுவரை இல்லாத சிக்கல்... தேசிய கொடியை ஏற்றப்போவது யார்...? பரபரப்பில் டெல்லி

தந்தி டிவி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள சூழலில், மாநிலத்தில் சுதந்திர தினத்தில் கொடியேcற்றப் போவது யார்...? என்ற குழப்பம் தொடர்கிறது.

நாட்டில் சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் கொடியேற்றுவது வழக்கம். டெல்லியில் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் அவர், கொடியேற்ற முடியாத சூழல் நிலவுகிறது. இதனையடுத்து தனக்கு பதிலாக டெல்லி நிதியமைச்சராக இருக்கும் அதிஷி தேசியக் கொடியை ஏற்ற கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார். ஆனால் சிறையில் இருப்பவர் இதுகுறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, எனவே கொடியேற்றுவது தொடர்பாக டெல்லி அமைச்சர் கோபால் ராய்க்கு கெஜ்ரிவால் தெரிவித்த தகவல் செல்லத்தக்கது அல்ல என்று மாநில பொது நிர்வாக துறை தெரிவித்துள்ளது. கெஜ்ரிவாலால் தன்னால் வரமுடியாது என தெரிவித்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது. விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் வேளையில், டெல்லியில் கொடியேற்றப் போவது யார் என்ற குழப்பம் டெல்லியில் தொடர்கிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்