இந்தியா

ரெம்டெசிவிர் உற்பத்தி அதிகரிப்பு - ரசாயனத் துறை அமைச்சர் மன்சுக் தகவல்

நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய ரசாயனத் துறை இணை அமைச்சர் மன்சுக் மந்தாவியா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய ரசாயனத் துறை இணை அமைச்சர் மன்சுக் மந்தாவியா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் தினசரி உற்பத்தி 33 ஆயிரம் குப்பிகளாக இருந்த நிலையில், தற்போது தினசரி உற்பத்தி மூன்றரை லட்சமாக உயர்ந்துள்ளதாக கூறினார். உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 20 லிருந்து 60 ஆக உயர்ந்ததால், தற்போது தேவைக்கு அதிகமான ரெம்டெசிவிர் விநியோகம் உள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, மாநிலங்களுக்கு வழங்கி வந்த ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, ரெம்டெசிவர் மருந்து நிலைப்புத் தன்மையை உறுதி செய்ய, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்புக்கும் உத்தரவிட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைக்காக 50 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை கொள்முதல் செய்து இருப்பில் வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்