வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் என்றிருந்த நிலையில், இந்த கால அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் படி, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது