இந்தியா

சபரிமலையில் அபிஷேக நெய் முறைகேடாக விற்பனை

தந்தி டிவி

சபரிமலையில் அபிஷேக நெய் முறைகேடாக விற்பனை

#sabarimalai #ghee #kerala #thanthitv

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், நெய் அபிஷேகம் செய்வதற்காக நெய் வழங்கப்படுகிறது. அந்த நெய்யை, கிர்சாந்திகள் எனப்படும் பணியாளர்கள், முறைகேடாக பணம் பெற்று பக்தர்களுக்கு கொடுப்பதாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் ரகசியமாக கண்காணித்தபோது, திருமூழிக்குளம் கோவிலைச் சேர்ந்த மனோஜ் என்பவர்தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 14 ஆயிரத்து 565 ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை பம்பை போலீசில் ஒப்படைத்தனர். கைதான மனோஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vijay | TVK | NDA-வில் விஜய்? - கோயலின் ரியாக்‌ஷனால் ஷாக் ட்விஸ்ட்

EPS | NDA Alliance | சட்டென்று பறந்த EPS.. பரபரப்பை கிளப்பும் முக்கிய முடிவுகள்?

Gas Cylinder Shortage| முழுமையாக நிறுத்தம்.. எல்லாம் முடிந்தது.. இனி அவ்வளவு தான்

🔴LIVE : Gas Cylinder |திரும்புகிறதா லாக்டவுன் காலம்? - காலி சிலிண்டரோடு வீதியில் இறங்கிய மக்கள்

Vaiko | DMK Alliance | தொகுதியை குறைத்த திமுக.. வைகோ எடுத்த திடீர் முடிவு