இந்தியா

4 ஆண்டுகளாக பலாத்காரம் - 11 பேர் மீது சிறுமி புகார்

தாய் மாமனே பலாத்காரம் செய்த கொடூரம் - 4 பேர் கைது

தந்தி டிவி

ஐதராபாத்தில் சிறுமியை 4 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள காமாத்திபுரா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது தாய்மாமன் உட்பட 11 பேர் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து, தொடர்ந்து மிரட்டி வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 4 ஆண்டுகளாக இந்த கொடுமை தொடருவதாக கூறிய நிலையில், சிறுமியின் தாய்மாமன் விஜய் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மற்றவர்களை போலீசார் காப்பாற்ற முயல்வதாக கூறி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சிறுமியிடம் மீண்டும் புகார் பெற்று, வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்