இந்தியா

மனைவிக்காக அரண்மனை கட்டிய கணவர்..

புதுச்சேரியில், ஒருவர், தன் மனைவிக்காக அரண்மனையை கட்டி அசத்தியுள்ளார். முகலாய கட்டடக் கலை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு காதல் சின்னம் குறித்து, விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

தந்தி டிவி

காதல் மனைவி மும்தாஜுக்காக யமுனா நதிக்கரையில் வெண் பளிங்கு கற்களால் தாஜ்மஹால் என்ற 'சொர்க்கத்தை' கட்டியவர் ஷாஜகான். இப்படி ஒரு கட்டடத்தை இக்காலத்தில் கட்ட முடியாது என புருவம் உயர்த்துபவர்கள் மத்தியில், தன் மனைவிக்காக அரண்மனை ஒன்றை கட்டியுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த படிக்காத கட்டடக் கலை நிபுணர் கனகவேல்..

புதுச்சேரியை அடுத்த கோட்டக்குப்பத்தை சேர்ந்த இவருக்கு கட்டிடக்கலையின் மீது தீராத ஆர்வம் கொண்டதன் வெளிப்பாடே இந்த அரண்மனை. முகலாய மன்னர்கள் வாழ்ந்த அரண்மனையின் அமைப்பையும் அதில் அரசர்கள் வாழ்ந்து பயன்படுத்திய வாழ்க்கை முறையையும் மையமாக கொண்டு தத்ரூபமாக தமது வீட்டை அமைத்துள்ளார்.

3 ஆயிரத்து 600 சதுர அடியில் ரூபாய் 75 லட்சம் செலவில், ஒன்றரை ஆண்டுகளில் இந்த பிரமாண்ட அரண்மனை கட்டப்பட்டுள்ளது. வீட்டினுள் நுழைந்தவுடன் முப்பரிமாண புத்தர் சிலை, இளைப்பாற பொன்னூஞ்சல் இடம்பெற்றுள்ளது. மணிச்சித்திரத்தாழுடன் வீட்டின் உள்பகுதியில் 18 இசைத்தூண்கள், ஆண்கள் பேசுவது மட்டும் எதிரொலிக்கும் விதமாக 36 டிகிரி கோணத்தில் பெண்கள் குரல் எதிரொலிக்காத வண்ணம் தர்பார் ஹால் உருவாக்கப்பட்டுள்ளது.

பழங்கால கலாச்சாரமும் கலையும் தற்போதைய நவீன யுகத்தில் மறைந்து வரும் சூழலில் பண்டைய அரசர்கள் வாழ்ந்த விதத்தையும், பயன்படுத்திய பொருட்களின் அமைப்பையும் எடுத்துக்காட்டும் கட்டிக்கலைக்கு கனகவேலின் அரண்மனை மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி