இந்தியா

டெல்லி கலவரத்தில் மனித உரிமை மீறல் புகார் - "உண்மை அறியும் குழுக்களை அமைக்க புலனாய்வு இயக்குநருக்கு ஆணை"

டெல்லி கலவரத்தின்போது நடந்த மனித உரிமை மீறல் தொடர்பான இரண்டு உண்மை அறியும் குழுக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப, புலனாய்வு இயக்குநருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. வன்முறை மற்றும் மோதலை கருத்தில் கொண்டு, ஓரளவு அமைதி நிலை திரும்பிய பின்னர் விசாரணையை தொடங்க அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளது. உண்மை அறியும் குழுவினர் வடகிழக்கு டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறை, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வன்முறை, கலவரத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து பேச உள்ளதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு உண்மை அறியும் குழுக்களை அனுப்ப புலனாய்வுத்துறை இயக்குநருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்