இந்தியா

Housewife | "மனைவியை வீட்டில் சும்மா இருக்காங்கன்னு சொல்றதா... மாதம் ரூ.50 ஆயிரம்.." - கோர்ட் அதிரடி

"மனைவியை வீட்டில் சும்மா இருக்காங்கன்னு சொல்றதா... மாதம் ரூ.50 ஆயிரம்.."

thanthitv

"மனைவியை வீட்டில் சும்மா இருக்காங்கன்னு சொல்றதா... மாதம் ரூ.50 ஆயிரம் கொடுக்கணும்" - கொந்தளித்த கோர்ட்.. போட்ட அதிரடி உத்தரவு வேலைக்குச் செல்லாத மனைவி வீட்டில் சும்மா இருப்பதாக கூறுவது தவறு என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜீவனாம்சம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடும்பத் தலைவியாக இருக்கும் மனைவி, குழந்தைகள் மற்றும் வீட்டை கவனிப்பதன் மூலம் முக்கிய பங்களிப்பதாக தெரிவித்துள்ளது. அவரது பங்களிப்பை புறக்கணித்து, சும்மா இருப்பவர் என கூறுவது நியாயமல்ல என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, ஜீவனாம்சத்தை தீர்மானிக்கும்போது, வருமானம் மட்டுமல்லாமல், குடும்பத்திற்கான அவரது உழைப்பின் பொருளாதார மதிப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்