Delhi | விடுதி இடிந்து விபத்து-24 மணி நேரத்திற்குப் பிறகு மாணவர் மீட்பு
டெல்லி சத்யா நிகேதன் பகுதியில் 5 மாடிகள் கொண்ட கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், 24 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு மாணவர் மீட்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய ஆதித்யா என்ற மாணவர், தன் மொபைல் போன் மூலம் வீடியோ கால் செய்து உதவி கோரி இருந்தார். இந்நிலையில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்... இந்த கொடூர விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்த நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரைதளத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், அலட்சியமாகச் செயல்பட்ட 5 மாநகராட்சி அதிகாரிகளை டெல்லி அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
#delhi #Hostelcollapse #students #accident #thanthitv