இந்தியா

Manipur | மணிப்பூரில் பயங்கரம் - துடிதுடித்து 15 பேர் பலி.. 150 பேர் பாதிப்பு

மணிப்பூரில் பயங்கரம் - துடிதுடித்து 15 பேர் பலி.. 150 பேர் பாதிப்பு

thanthitv

Manipur | மணிப்பூரில் பயங்கரம் - துடிதுடித்து 15 பேர் பலி.. 150 பேர் பாதிப்பு #Manipur #death #thanthitv மணிப்பூர் மாநிலத்தில் கலப்படக் கள்ளச்சாராயம் குடித்ததில், கடந்த 3 நாட்களில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டேல் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 150-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயத்தில் மெத்தனால் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனினும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே உயிரிழப்புக்கான காரணம் உறுதியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மருத்துவமனைகளுக்குச் சென்ற முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங், பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Ranipet | Crime | ராணிப்பேட்டை மூதாட்டி கொலையில் அதிர்ச்சி திருப்பம்.. மகளே செய்துவிட்டு நாடகம்

BREAKING || டாஸ்மாக் தொடர்பாக கசிந்த தகவல்... உடனே ரெய்டில் இறங்கி அதிரவிட்ட DVAC

V S Babu | TVK | வி.எஸ். பாபுவின் இறுதி நொடிகள்... கடைசி வரை நின்று மரியாதை செய்த CM விஜய்

Madurai | Tanishq | மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை.. `நிஷாந்துக்கு' அறிவித்தது கோர்ட்

V S Babu | "கலங்காதீங்க நான் இருக்கேன்.."- வி.எஸ். பாபு மகனுடனேயே கடைசி வரை நடந்து செல்லும் CM விஜய்